உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன்

                                                                                                                               

உம் சேவைக்காய்             

என்னை அர்ப்பணிக்கின்றேன்

ஏற்றுக்கொள்ளுமே

என்னை ஏற்றுக்கொள்ளுமே

                               

           பலியாக என்னை படைத்தேன்

                                ஏற்றுக்கொள்ளும் இயேசுவே(2)

 

பாகாலை முத்தம் நான் செய்வதில்லை

ஒருபோதும் அவன்முன்பாய் பணிவதில்லை(2)

இச்சைகள் மாமிசத்தை வெறுத்திடுவேன்

பரிசுத்தரே உம்மை பின் தொடர்வேன்(2) - பலியாக

 

இருமனம் நான் என்றும் கொள்வதில்லை

இரண்டு எஜமான்கள் எனக்கு இல்லை(2)

ஓருமனதோடு என்றும் உம்மை சேவிப்பேன்

என் ஆயுள் முழுவதும் நீர் மட்டுமே - பலியாக